கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பூர வளைகாப்பு விழாநடந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் நேற்று ஆடிப்பூர வளைகாப்பு விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து செண்பகவல்லி அம்மனுக்கு கர்ப்பிணிப் பெண் போல அலங்காரம் செய்து, வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள் மற்றும் மங்களப் பொருட்கள் படைக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீப ஆராதனை நடந்தது. விழாவில் திரளான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள் கயிறு, லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.


