சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மஞ்சள் பை உபயோகிக்கும் திட்டத்தை பேருராட்சித் தலைவர் ரெஜினி ஸ்டெல்லாபாய் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் தமிழக அரசின் நமது மருத்துவமனை மகத்தான மருத்துவமனை திட்டத்தின்கீழ் நெகிழி பயன்பாட்டை தவிர்க்க மீண்டும் மஞ்சள் பை உபயோகிப்போம் திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு சாத்தான்குளம் பேரூராட்சி தலைவர் ரெஜினிஸ்டெல்லா பாய் தலைமை வகித்து திட்டத்தை துவக்கி வைத்து மாத மருந்துகள் வாங்கும் நோயாளிகளுக்கு மஞ்சள் பையில் மருந்துகள் வழங்கினார்.
தலைமை மருத்துவர் டாக்டர் ஆத்திக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் இணைந்து குழுவாக தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, இளநிலை உதவியாளர் ஜெரோம், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டணர். மருந்தாளுநர் சித்திரைராஜன் நன்றி கூறினார்.


