சாலமன் பாப்பையா ( பிப்ரவரி 22, 1936) மதுரையைச் சேர்ந்த புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ஆவார். இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேரராசிரியாகப் பணிபுரிந்தவர்.இனிய தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்த பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.இவர் சங்கர் இயக்கிய முதல்வன், பாய்ஸ், சிவாஜி உள்ளிட்ட மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மதுரை, திருமங்கலம் தாலுக்கா சாத்தங்குடியில் பிறந்தவர் பாப்பையா. இவரும் இவரது மனைவி ஜெயபாயும் மதுரையில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.