திருநெல்வேலி கே.டி.சி நகரில் “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் சார்பில் மூன்றாம் கட்டமாக மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி நகரின் நெடுஞ்சாலையை “எழில்மிகு மற்றும் பசுமைமிகு” நகரமாகவும் மற்றும் சாலையாகவும் மாற்றுவதற்காக கங்கை கொண்டான் டிபி சோலார் நிறுவனம், “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கம் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனம் சார்பில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட கே.டி.சி நகரில் மூன்றாம் கட்டமாக மரக்கன்றுகள் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சமூக நலத்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு இயக்க மாநில தலைவருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி, ஆசிரியர் வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக நடைப்பயிற்சி நண்பர்கள் குழு “விதைப்போம் வளர்ப்போம்” இயக்கத்தின் தலைவரும் சாத்தான்குளம் வட்டாட்சியர் கே.லெனின் மரக்கன்று நடும் பணியை துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து சாரதா கல்லூரியிலிருந்து அரசு போக்குவரத்து பணிமனை (டெப்போ) மேம்பாலம் வரை நெடுஞ்சாலையின் இரு பகுதிகளின் ஓரங்களிலும் சுமார் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வளர்க்கப்பட்ட 6 அடி முதல் 10 அடி வரையிலான உயரமான புங்கை , வேம்பு மற்றும் வில்வம் போன்ற மூன்று வகையான மூன்றாம் கட்டமாக நூறு நடப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது வரை மொத்தம் 514 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. மேலும் நடப்பட்ட மரக்கன்றுகள் தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை லாரியின் மூலம் தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது பாராட்டுக்குரியது.
இதில் லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குனர் எஸ்.பானுமதி, சுப்ரமணியன், இமாம் , மணிமாறன் டார்லிங் நகர் முருகேசன், முருகன், விஜயகுமார், அன்பு (எ) அங்கப்பன், வேல்பாண்டி, சங்கர பாண்டி மற்றும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி காலை 9மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெற்றது. மேலும் இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது.
இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நடைப்பயிற்சி நண்பர்கள் குழுவினரின் “விதைப்போம்” “வளர்ப்போம் ” இயக்கத்தினர் மற்றும் மதர் சமூக சேவை நிறுவனத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்


