நாசரேத் நூலகத்தில் வள்ளுவர் வாசகர் வட்டம் சார்பில் மாதாந்திர இலக்கியக்கூட்டம் நடந்தது.
வாசகர் வட்ட தலைவர், ஓய்வு பெற்ற தாசில்தார் அய்யாக்குட்டி தலைமை வகித்தார். நூலகர் பொன் இராதா முன்னிலை வகித்தார். தாமிரபரணிக் கரையோர தொல்லியல் ஆய்வுகள் என்ற தலைப்பில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பேசினார். பணி நிறைவு பேராசிரியர் காசிராசன், எழுத்தாளர் ஆறுமுகப்பெருமாள், வாசகர் வட்ட துணைத்தலைவர் தணிக்கைத் துறை பணி நிறைவு துணை இயக்–குநர் கொம்பையா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். கூட்டுறவுத்துறை ம. கண்ணன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை நாசரேத் நூலக வள்ளுவர் வாசகர் வட்டம் செய்திருந்தது.


