தூத்துக்குடி மாநகர திமுக அயலக அணி நிர்வாகிகள் மாவட்ட செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தூத்துக்குடி திராவிட முன்னேற்ற கழகத்தின் 15-வது கழக தேர்தல் முறையாக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையம் வழிமுறைக்கு இணங்க தேர்தல் நடைபெற்று கிளை செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்படி மாநகர திமுக அயலக அணி அமைப்பாளராக வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், நிர்வாகிகளாக சுப்பிரமணியன், சம்சர்கான்ராஜா, வரதராஜன், ஆல்வின், காளிதாஸ், ஜோயல், இம்மானுவேல்ராஜ், ஆகியோர் நியமணம் செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தளபதியார் ஆட்சியில் செய்த சாதனைகளையும் திட்டங்களையும் மாநில வளர்ச்சி பணிகளையும் அனைத்து தரப்பினர்கள் மத்தியிலும் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.
2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மாநகர திமுக அயலக அணியின் பங்கு அதிகம் இருக்க வேண்டும் அதிக உறுப்பினர்களை சேர்த்து மற்ற மாவட்டங்களை காட்டிலும் நமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ்வதற்கு ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் சரவணக்குமார், பகுதி பொருளாளர் உலகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.


