தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வீடுகளில் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு செய்து வருகின்றனர்.
தமிழக முழுவதும் நவராத்திரி விழா ஆண்டு தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடியில் நவராத்திரி விழாவையொட்டி மக்கள் தங்கள் வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு பொம்மைகளை வைத்து அலங்கரித்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் தூத்துக்குடியில் வசிக்கும் சந்திரலேகா, தனலட்சுமி, செல்ல பட்டர் ஆகியோர் இல்லத்தில் 30 ஆண்டுகளாக வீட்டில் கொலு வைத்து பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வருகிறார்கள்.இவர்கள் எந்தெந்த ஊருக்கு போனாலும் அந்தந்த கடவுளை வாங்குவது வழக்கம்.
அதேபோல் குருவாயூர் கிருஷ்ணன், டெல்லிமதுரா பிருந்தாவனகிருஷ்ணர், அயோத்தில உள்ள ராமர், பூரி ஜெகநாதர், போன்ற அந்தந்த ஊரில் பிரசித்தி பெற்ற சிற்பங்கள் மற்றும் வயதான தாத்தா பாட்டி பொம்மைகளும், லட்சுமி, சிவன் வளைகாப்பு பொம்மைகள், மீனாட்சி திருக்கல்யாணம், சீனிவாசர் திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் பொம்மைகள், சரவண பொம்மை, சிவபெருமான் புட்டுக்கு மண் சுமந்த கதையை விளக்கும் பொம்மை செட், போன்ற பொம்மைகளை வைத்து. வழிபட்டு வருகின்றனர். இதில் மக்கள் எல்லா வளமும் பெருக செய்து, மக்கள் எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும் எனவும் பிராத்தனை செய்தனர்.


