தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட 2வது மாநாடு தூத்துக்குடியில், கைலாஷ் மஹாலில் வைத்து நடைபெற்றது.
மாநாட்டிற்கு தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் எஸ்.நூர் முகம்மது, தொடக்க உரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், மகா சன்னிதானம் சாமித் தோப்பு பால பிரஜாபதி அடிகளார், தூத்துக்குடி மாநகர ஜமா அத்துல் உலமா சபை செயலாளர் ஷம்சுத்தீன், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்க அருட்தந்தை தங்கையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில பொருளாளர் அகம்மது உசேன் நிரைவுறை ஆற்றினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டத்தில் கடந்த 1952 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1953 ஆம் திறக்கபட்ட பாரம்பரியமிக்க ஏரல் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு பல்வேறு வசதிகளும் மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது புதிதாக கட்டப்பட உள்ள இந்த மருத்துவமனைக்கு நிலமும் கட்டிடங்களையும் தானமாக வழங்கிய நாகூர் மீரா குடும்பத்தாரை நினைவு கூறும் வகையில் ஏற்கனவே இருந்த செய்யீது பாத்திமா ஞாபகார்த்த லோக்கல் பண்டு மருத்துவமனை என்ற பெயர் தாங்கிய கல்வெட்டுகள் பதிப்பதற்கு மற்றும் பெயர் பலகை வைப்பதற்கும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போரை நிறுத்தி பாலஸ்தீனத்தின் இறையாண்மையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்ற பட்டன.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தூத்துக்குடி மாவட்ட தலைவராக சி.எஸ்.ஆர்.முருகன், செயலாளராக முகமது ஜக்காரியா, பொருளாளராக கெண்ணடி உட்பட 15 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டன.


