தூத்துக்குடியில் 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியா்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளா்களாக வேலை செய்யும் ஊழியா்களுக்கு கடந்த 13 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து, தூத்துக்குடி பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்தத் தொழிலாளா் சங்கம் ஆகியன சாா்பில் பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் தா்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, பிஎஸ்என்எல் ஊழியா் சங்க போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 13 மாத ஊதியத்தை உடனே வழங்க வேண்டும், பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களை ஆள்குறைப்பு செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.