தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டு பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி 59வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பொதுமக்களிடம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழகச் செயலாளர் மேகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


