தூத்துக்குடியில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள செவிலியரின் மகன் சிகிச்சைக்காக அமைச்சர் கீதாஜீவன் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் பிச்சம்மாள். இவரது மகன் ராஜகுரு Budd – chiari syndrome (obstruction of hepatic venous out) என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்காக செவிலியர் நலச்சங்கத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். இந்நிலையில், ராஜகுரு சிகிச்சைக்காக அமைச்சர் கீதாஜீவன் ரூ.1லட்சம் நிதியுதவி வழங்கினார். இதில், செவிலியர் நலச்சங்கம் செயலாளர் உமா, நிர்வாகி தமிழ்ச் செல்வி, டாக்டர் ஜேம்ஸ் சுந்தர் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.


