தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் முன்னிட்டு வல்லநாடு ஆவுடையம்மாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவில் உள்ள வளாகத்தில் உழவாரப்பணி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முதியோர் கருணை இல்லம் வசவபுரத்தில் உள்ள முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிகள் மாவட்டச் செயலாளர் வக்கீல் பிரபு மற்றும் ஒன்றிய தலைவர் நங்கமுத்து தலைமையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் மற்றும் கல்வி நிறுவனங்களில் தொழிலாளர் நலப்பிரிவு மாநில முன்னாள் செயலாளர் செல்வின் சாவான் கலந்து கொண்டார்கள், மருத்துவர் அமுல் சவான் , ஒன்றிய நிர்வாகிகள் சதீஷ், சுந்தர்ராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன் ,சித்திரை குமார், பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ஆவுடையப்பன், விருந்தோம்பல் பிரிவு ஒன்றிய தலைவர் ஜெயராமன், அரசு தொடர்பு ஒன்றிய செயலாளர் கோபால், குமார் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் காஞ்சனா தேவி மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்


