சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்” என்ற உயரிய தேசிய விருதை பெற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆற்றிய சிறப்பான மற்றும் அரிய சேவைகளை கௌரவிக்கும் வகையில், இந்திய அரசு ஆண்டுதோறும் ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு “சுபாஷ் சந்திர போஸ் ஆப்தா பிரபந்தன் புரஸ்கார்” என்ற உயரிய தேசிய விருதை அறிவித்து வழங்கி வருகிறது.
இந்த விருது பேரிடர் தடுப்பு, தாக்கம் குறைப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கைத் தயார்நிலை, அவசரகால மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள், மறுவாழ்வு, மறுகட்டமைப்பு, ஆராய்ச்சி, புதுமை, முன்னெச்சரிக்கை அமைப்புகள், சமூக விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட பேரிடர் மேலாண்மையின் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது.
எனவே, பேரிடர் மேலாண்மைத் துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இவ்விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.gov.in என்னும் இணையதள முகவரியில் 30.09.2026-க்குள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்


