தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் சென்னை AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் -கன்ஸ்ட்ரஷன்ஸ் சார்பாக புனித ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை எளிய காசநோயாளிகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார மருத்துவ அலுவலர் ஜோசுவா பிரவுண் தலைமையில் நடைபெற்றது. உதவி மருத்துவ அலுவலர்முத்தமிழ்செல்வி முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்அப்துல் ரஹீம் ஹீரா வரவேற்று பேசினார்.
ரமலான் நோன்பை முன்னிட்டு ஏழை, எளிய காசநோயாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், பலசரக்கு சாமான்கள் உள்ளிட்ட உதவிகளை AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் – கன்ஸ்ட்ரஷன்ஸ் உரிமையாளர் அப்துல் அஜீம் வழங்கினார்.
வட்டார மருத்துவ அலுவலர்ஜோசுவா பிரவுண் பேசுகையில், காசநோயாளிகளுக்கு மருந்து மாத்திரை மட்டும் போதாது, அவர்களுக்கு சிகிச்சை காலத்தில் தேவையான சத்தான உணவுப் பொருட்கள் உட்கொள்ள வேண்டும் ஆகவே இதனை கருத்தில் கொண்டு AAA இன்சினியரிங் கன்சல்டன்ஸ் – கன்ஸ்ட்ரஷன்ஸ் சார்பில் ரமலான் நோன்பை முன்னிட்டு தொடர்ந்து ஆறாவது வருடமாக காசநோயாளிகளுக்கு உணவுப் பொருட்களை வழங்கி வருவது மனிதநேயமிக்க செயலாகும். இந்த ஆண்டு ரூ.20,000 மதிப்புள்ள உணவுப் பொருட்களை நோயாளிகளுக்கு வழங்கி உள்ளார்கள் என்று கூறினார்
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இறுதியாக சுகாதார பார்வைபார்வையாளர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.


