நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் நடைபெற உள்ள நிலையில் அதற்காக பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினர் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு துணை ராணுவ படையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடந்தது.
இந்த கொடி அணிவிப்பிற்கு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் காவல் ஆய்வாளர் இன்னோஸ் குமார், ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் பத்மநாப பிள்ளை, சப் இன்ஸ்பெக்டர் செல்வ பிவீன் பிரிட்டோ,ஸ்டேன்லி ஜான், முத்துமாரி மற்றும் தமிழ்நாடு காவல்துறையினர், துணை ராணுவ படையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கொடி அணிவகுப்பு செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு தொடங்கி இந்தியன் வங்கி வழியாக வி.கோவில்பத்து ஆட்டோ ஸ்டான்ட் வழியாக மீண்டும் காவல் நிலையம் வந்தடைந்தது.
அதன் பின்னர் இதே போல் கருங்குளத்தில் இந்த கொடி அணி வகுப்பு நடந்தது.


