நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக கங்கை நாதபாண்டியன் பதவியேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீன் குமார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி அரண்மனை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கை நாதபாண்டியன் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். புதிய இன்ஸ்பெக்டரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் மற்றும் போலீசார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்


