“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், திருவைகுண்டம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, முகாமிட்டு ஆய்வு செய்தார்.
மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், இன்று (21.02.2024) தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டம் கொங்கராயக்குறிச்சி முதல் மணக்கரை வரை செல்லும் 1.6 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலையில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ.1.91 கோடி செலவில் நடைபெற்றுவரும் தற்காலிக சாலை சீரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
கருங்குளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பயணியர் நிழற்குடை கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்தார்கள்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், திருவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் உள்ளனர்.


