திருக்களூர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் குபேரனுக்கு நிதி கொடுத்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள நவதிருப்பதகளில் 8 வது திருப்பதியான திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று குபேரனுக்கு நிநி கொடுத்த தினம் சிறப்பாக கொண்டாடப்படும். பார்வதி சாபத்தால் குபேரன் நவநிதிகளையும் இழந்தார். பின்னர் பெருமாள் கட்டளையின்படி திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் கோவிலில் கைங்கர்யம் செய்து பெருமாளிடம் இழந்த நிதி கேட்டார். அதனை மாசி மாதம் சுக்ல பட்ச துவாதசி அன்று பெருமாள் கொடுத்தார். அதை கொண்டாடும் விதமாக இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நித்தியல் முடிந்து உற்சவர் வைத்தமாநிதி பெருமாள் தாயார்களுடன் காலை 8 மணி அளவில் சயனக்குறட்டிற்கு எழுந்தருளி இடது பக்கம் மதுரகவி ஆழ்வார் உடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பக்தர்கள் அனைவரும் மூலவர் பெருமாள் பாதத்திலும் அளந்து கொடுத்த மரக்காலிலும் தங்களிடம் உள்ள பணம் மற்றும் பத்திரங்கள் ஆகியவற்றை வைத்து வணங்கினால் நிதி பெருகும் என பக்தியுடன் வைத்து பெற்று சென்றார்கள். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


