அதீத கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றி நிவாரண உதவி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும், முழுமையாக தன்னை ஈடுபடுத்திக். கொண்டு சேவையாற்றிய மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு வட்டாட்சியர் மு. கோபால் பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 மற்றும் 18 தேதிகளில் பெய்த அதீத கன மழை மற்றும் வெள்ளத்தினால் தாமிரபரணி ஆறு மற்றும் “கடலுக்குப் பாதி கடம்பா” என்று சொல்லப்படும் கடம்பாகுளம் உட்பட பல்வேறு குளங்கள் உடைந்து வெள்ள நீர் அனைத்து விவசாய பயிர் விதைத்திருந்த நிலங்களையும், அடிப்படை போக்குவரத்து வழித்தடங்களையும், தெருக்களில் புகுந்து, அனைத்து குடியிருப்புகளையும் சேதப்படுத்தியது இதனால் கிராமங்களுக்கான சாலை துண்டிக்கப்பட்டதால் ஆங்காங்கே உள்ள கிராமங்கள் தனி தீவுகள் போல் காட்சியளித்தது. இதைக் கண்டு பதறி துடி துடித்து போன மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று வேளையும் தொடர்ந்து உணவளித்து “மதர்” தொண்டு நிறுவனத்தின் பெயருக்கு ஏற்ப தாயைப் போல கவனித்துக் கொண்டார்.
மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும், மற்றும் குடும்பங்களுக்கும் தொடர்ந்து அரிசி, பருப்பு, ஆயில், மற்றும் மசாலா பொருட்களும், மேலும் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளையும், மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களையும் தொடர்ந்து பல கட்டங்களாக வழங்கினார்.
மேலும் மழை வெள்ளத்திலிருந்து மக்களை மீட்டு பாதுகாத்தது, பாதுகாப்பு முகாமிற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து உணவு மற்றும் அடிப்படைத் தேவைகளை வழங்கி “கண்ணை இமை போல” மக்களை பாதுகாத்தார். இந்த சிறந்த சேவையை அங்கீகரித்து பாராட்டி ஊக்கப்படுத்தும் வகையில் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடிக்கு ஏரல் தாசில்தார் கோபால் நேரில் அழைத்து பாராட்டி, நற்சான்றிதழ் வழங்கி கவுரப்படுத்தினார். பாராட்டு சான்றிதழ் பெற்ற மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடியை அரசு அதிகாரிகளும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


