செய்துங்கநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதியில் அனைவரும் விரும்பும் மருத்துவராக பணியாற்றியவர் டாக்டர் கலீல் ரகுமான். இவர் கால்நடை மருத்துவராக இருந்து ஓய்வு பெற்ற பின்பும் மக்கள் மருத்துவராக செய்துங்கநல்லூரில் இயங்கிவந்தார். பணமே இல்லாமல் யார் வந்து நின்றாலும் மருத்துவம் செய்து அவர்களுக்கு வேண்டிய உதவியும் செய்து வருபவர். இவர் தற்போது தி.மு.க வில் முக்கிய பொறுப்பு வகித்து மக்கள் பணியாற்றி வந்தார். தற்போதும் கட்சிமூலமாக மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வந்தார். மக்கள் மருத்துவர் என பெயர் பெற்ற டாக்டர் கலீல் ரகுமான் அவர்கள் இன்று மாலை 4 மணிக்கு அகால மரணமடைந்தார் . அவரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் மருத்துவர் டாக்டர் கலீல் ரகுமான் அவர்களின் இழப்பு, ஏழை எளிய மக்கள் மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்கே பெரும் இழப்பு. அவரின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் – முத்தாலங்குறிச்சி காமராசு


