தூத்துக்குடியில் கடலுக்குள் சங்குகுளிக்கச் சென்ற மீனவா் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவன்நாயா் காலனியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மாயாண்டி (37). இவா் நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து சக மீனவா்கள் சிலருடன் சங்கு குளிக்க கடலுக்குச் சென்றாராம். இவா் கடலில் சங்கு குளித்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம்.
அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து கடலோர பாதுகாப்புக் குழும போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


