மேலஆழ்வார்தோப்பு கிராம உதயம் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள மேல ஆழ்வார்தோப்பு கிராம உதயம் கிளை அலுவலகத்தில் இன்று டெங்கு காய்ச்சல் மற்றும் கொசுப்புழு தடுப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிராம உதயத்தின் நிறுவன இயக்குனர் டாக்டர் சுந்தரேசன் தலைமை வகித்தார். கிளை மேலாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். தனி அலுவலர் ராமச்சந்திரன் வரவேற்புரை ஆற்றினார். மைய தலைவர்கள், தன்னார்வ தொண்டர்கள் பொதுமக்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அனைவருக்கும் விழிப்புணர்வும், விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.


