தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 423.50 மிமீ மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 6.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் 423.50 மிமீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினம் மற்றும் திருச்செந்தூரில் தலா 45மிமீ மழை பெய்துள்ளது.
பிற பகுதிகளில் மழை அளவு விபரம் வருமாறு (மிமீ): வைப்பாரில் 39, குலசேகரபட்டினம் 39, சாத்தான்குளம் 33, தூத்துக்குடியில் 27.50, சூரங்குடி 27, கடம்பூர் 26, ஸ்ரீவைகுண்டம் 25, கயத்தார் 15, வேடநத்தம் 12, கோவில்பட்டி 13, மணியாச்சி 2, கீழ அரசரடி 2 மீமீ என சராசரியாக 22.29 மிமீ மழை பெய்துள்ளது.


