தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் தலைமை வகித்தார். ஆசிரியை நந்தினி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சி.எம்.மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை என்.வள்ளியம்மாள் கலந்து கொண்டு, திருக்குறள் ஒப்புவித்தல், மாறுவேடப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வாசிக்கும் திறனை ஊக்குவிக்கும் நோக்கில் அக்பர், பீர்பால் கதைகள் மற்றும் பொது அறிவு புத்தகங்களையும் வழங்கி சிறப்பித்தார்.
மேலும் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற தீபக்ராஜ், சுபாஷினி, தங்கஅனு ஆகியோரை பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது. அதன்பின் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியினை ஆசிரியைகள் கௌரி, கிருபா ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவில் ஆசிரியை இசக்கியம்மாள் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் ரா.ச.பிரியங்கா செய்திருந்தார்.


