தூத்துக்குடியில் செல்போன்களுக்கு பேரிடர் கால எமர்ஜென்சி அலர்ட் தகவல்கள் அனுப்பும் பரிசோதனை தொடங்கியுள்ளது..
நாடுமுழுவதும், பேரிடர் காலங்களில் அவசரகால தகவல் தொடர்பு அளிப்பது குறித்து அபாய எச்சரிக்கை ஒலியுடன் அனைவரது செல்போனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள செல்போன் பயனாளர்களுக்கும் பேரிடர் கால எமர்ஜென்சி அலர்ட் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.


