தூத்துக்குடியில் பிரபல உணவகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பொருள்கள் எரிந்து சேதமானது.
தூத்துக்குடியில் டிஎஸ்எப் பிளாசா அருகில் உள்ள அசைவ அரசன் உணவகத்தில் கேஸ் கசிவு காரணமாக இன்று காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அங்கு இருந்த உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்சாதனங்கள் தீயில் எரிந்து சேதமாகின. தகவல் அறிந்த தூத்துக்குடி உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி தலைமையில் பணியாளர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


