திருச்செந்தூர் கோவிலில் திரி சுதந்திரர்கள் சிவாச்சாரியர்களிடையே இடையே வாக்குவாதம் எதிரொலியாக சண்முகர் சப்பரம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று ஏழாம் திருவிழா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் நிகழ்ச்சி நடக்க இருந்தது.
இந்த நிலையில், சுவாமி சண்முகருக்கு நகை சாத்துவதில் திரி சுதந்திரர்கள் மற்றும் சிவாச்சாரியார்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுவாமி சண்முகருக்கு நகை சாத்தாமல் சப்பரம் புறப்படுவதில் சுமார் 2 மணி நேரம் தாமதமானது. கோயில் நிர்வாகம் சார்பில் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


