தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற காமராஜரின் 124-ஆம் பிறந்தநாள் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆம் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கையெழுத்து இயக்கத்துடன் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலை ஆண்டி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த முன்னாள் டிஎஸ்பி அனுசுயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சங்கரம்மாள், நேரு காலனி ஆறுமுகம், மைக்கேல் பிரபாகர், வட்டாரத் தலைவர் புதியம்புத்தூர் ஜேம்ஸ், அருள் வளவன் உட்படப் பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான விரிவான ஏற்பாடுகளை மாவட்டத் துணைத் தலைவர் பெத்து ராஜ், வட்டாரத் தலைவர் எட்வர்ட் ராஜ் ஆகியோர் கவனித்துக் கொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டுப் பள்ளி குழந்தைகளுக்குப் பைகள், நோட்டுப் புத்தகங்கள், ஏழை எளிய தாய்மார்களுக்குச் சேலைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக் தாகூர் அறிவுறுத்தலின் பேரில், “லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்” என்ற தலைப்பிலான ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடையே நடத்தப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கையெழுத்துகளைப் பதிவு செய்தனர்.


