தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 51 காவல்துறையினருக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 6 காவல் ஆய்வாளர்கள் உட்பட 51 காவல்துறையினர் மற்றும் நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்து சிறப்பாக பணியாற்றிய உதவி அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.


