நாசரேத் அருகே உள்ள பாட்டக் கரை தூய இம்மானுவேல் ஆலய அசன விழாவில் இப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி பத்து நாட்கள் நடந்தது. முதல் நாள் பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெற்ற உபவாச கூட்டத்தை ஊழியர் ஜோசப் அற்புதராஜ் நடத்தினார். 2ம் நாள் திருச்சபை மக்கள் பாட்டக்கரை ஊரைச் சுற்றி ஜெபபவனி வந்தனர். 3ம் நாள் வி.பி. எஸ். கலை நிகழ்ச்சிகள் ஆலய வளாகத்தில் வைத்து நடைபெற்றது.
4ம் நாள் பாடகர் ஞாயிறு சிறப்பு ஆராதனை தூய இம்மானுவேல் ஆலயத்தில் நடந்தது. இதில் சாமுவேல் ரவி ஐயரவர்கள் இறைச்செய்தி அளித்தார். இதைத் தொடர்ந்து 3 நாட்கள் இரவு 7 மணிக்கு ஆவிக்குரிய கூட்டம் நடைபெற்றது. இதில் சென்னை ஊழியர் ஜேக்கப் சிறப்பு செய்தி அளித்தார். 6ம் நாள் காலை 8 மணிக்கு ஜி எம் எஸ் விற்பனை விழா நடைபெற்றது மதியம் 2:30 மணிக்கு விஷ்வவாணி ஊழியம் சார்பில் காணிக்கை படைக்கும் ஆராதனை நடைபெற்றது.
7ம் நாள் மாலை 4 மணிக்கு குருவானவர் ஜெயசிங் ரத்தினராஜ் ஞானஸ்நான ஆராதனை நடத்தினார். மாலை 6 மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் குருவானவர் யோபு ரத்னசிங் செய்தியளித்தார். தூய இம்மானுவேல் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை 8ம் நாள் அதிகாலை 3 மணிக்கு நடைபெற்றது. இதில் திருமண்டல குருத்துவ செயலர் இம்மானுவேல் வான்ஸ்றக் ஐயரவர்கள் செய்தியளித்தார்.
மாலை 4 மணிக்கு நடைபெற்ற அசனவிருந்து வைபவத்தில் சபை ஊழியர் ஜெஃப்ரி வேதபாடம் வாசித்தார். சபை குருவானவர் ஜெயசிங் ரத்தினராஜ் ஜெபித்து அசன வைபவத்தை தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டார பகுதி மக்கள் திரளாகக் கலந்து கொண்டு அசன உணவு வாங்கிச் சென்றனர்.அசன விருந்து வைபவம் நிறைவுபெற்றதும் இரவு 7 மணிக்கு ஸ்தோத்திர ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு பட்டிமன்றம் பாளை தூய யோவான் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜான் கென்னடி தலைமையில் நடைபெற்றது.
9ம் நாள் காலை 10 மணிக்கு வாலிபர் பண்டிகை நடைபெற்றது.தூத்துக்குடி நாசரேத் திருமண்டல வாலிபர் இயக்குநர் ஜேசன் தர்மராஜ் ஐயரவர்கள் சிறப்பு செய்தியளித்தார்.நிறைவாக 10ம் நாள் ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை ஆராதனை நடைபெற்றது. இயக்குநர் ராபின்சன் ஐயரவர்கள் தேவசெய்தி அளித்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய சபை குருவானவர் ஜெயசிங் ரத்தினராஜ் ஐயரவர்கள் தலைமையில் பரிபாலன கமிட்டித் தலைவர் ஜெபசிங் செயலாளர் ஜெபசிங் ஞானராஜ் இணைச் செயலாளர் அருள்ராஜ் பொருளாளர் சாலமோன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் அன்புதுரை மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.


