தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோட்டில் உள்ள அங்கன்வாடி மையத்தை பராமரிக்க வேண்டும் என திமுக 40வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேயருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், “40-வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு காட்டன் ரோட்டில் அங்கன்வாடி இயங்கி வருகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக அதில் எந்த பராமரிப்பும் இல்லை. நானும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தயவு செய்து குழந்தைகளின் நலன் கருதி அங்கன்வாடியை பராமரிப்பு செய்ய வேண்டும்.
மேலும், 40-வது வார்டுக்கு உட்பட்ட வடக்கு பீச்ரோடு பழைய துறைமுகத்திலிருந்து இந்திரா காந்தி சிலை வரை சாக்கடை கால்வாய் தூர்வாராமல் குப்பையும் மண் திட்டும் பதிந்துள்ளது. அதை துப்புரப்படுத்தி மழை பெய்தால் ரோட்டில் உள்ள தண்ணீர் சாக்கடை கால்வாய் வழியாக ஓடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


