12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நுழைவுச்சீட்டுகளை இன்று(பிப்.20) முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில வழிக் கல்வி பயிலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை இந்த மாத இறுதிக்குள் நடத்தி முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 4ம் தேதி துவங்கி மார்ச் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாணவ, மாணவிகளின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று(பிப்.20) பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.


