தூத்துக்குடி மாவட்டத்தில் தகவல் சேவை திட்டத்தின் கீழ் ரிலையன்ஸ் அறக்கட்டளை மீனவர்களுக்கு கடல் காலநிலை குறித்த தகவல்களை கட்டணமில்லா அலைபேசி, குரல் வழி செய்தி மற்றும் அலைபேசி பகிரி மூலமாக அளித்து வருகிறது. மேலும் மீனவர் நலத்துறையில் இருக்கும் திட்டங்கள், கடலில் பாதுகாப்பாக மீன் பிடிப்பது, மீன்களை சுத்தம் சுகாதாரமாக கையாள்வது போன்ற தகவல்களை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற விழிப்புணர்வுகளை மீனவ பெண்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு தூத்துக்குடி தெற்கு கிராமத்தில் தலை சுமட்டு பெண்களுக்கு குரல் வழி நிகழ்ச்சியை நடத்தியது. மீனவர் நலத்துறையின் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் மீனவர் நலவாரியம், மீனவர் காப்பீடு, சேமிப்பு நிதி, கல்வி உதவித்தொகை, திருமண உதவி, போன்ற திட்டங்கள் குறித்து விளக்கி விளக்கி கூறினார். இதில் சுமார் 30 தலை சுமட்டு மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மீனவ பெண்கள் குழு நிர்வாகிகள் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் செய்திருந்தனர்.


