ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டம் பெருமணல் மீனவ கிராமத்தில் வைத்து தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பெருமணல் கிராம பங்குத்தந்தை அவர்கள் தலைமை வகித்தார். கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தை சார்ந்த சுமார் 60 மாணவிகள் ஈடுபட்டனர். தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து ரிலையன்ஸ் அறக்கட்டளையின் பணியாளர்கள் எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் பெருமணல் கிராமத்தை சார்ந்த தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர்.


