செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான ஆலயம் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிர பாதீஸ்வரர் ஆலயத்தில திருவாசக முற்றோருதுதல் நிகழ்ச்சி நடந்தது .
தென் தில்லை என்று அழைக்கப்படும் செய்துங்கநல்லூர் சிவன் ஆலயம் மிகச் சிறப்பான ஆலயமாகும். இந்த ஆலயத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய அளவில் நிகழ்ச்சி எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் ஏற்பாடில் திருப்பணி நடந்து, கும்பாபிசேகம் முடிந்து அனைத்து திருவிழாக்களும் மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சனவரி 20 ம் தேதி திருவாசகம் முற்றோருதல் நிகழ்வு நடைபெறும்.
இந்த ஆண்டும் ஜோதி முத்தையா பிள்ளை தலைமையில் நெல்லை சிவநெறி மணிவாசகர் அருட்பணி மன்றத்தின் சார்பாக 2264 வது நிகழ்ச்சியாக திருவாசக முற்றோதுதல் வேள்வி இந்த ஆலயத்தில் நடைபெற்றது. இதில் 100க்கு மேற்பட்ட சிவனடியார்கள் கலந்துகொண்டனர். இதையட்டி அதிகாலையில் சிவன், சக்தி உள்பட பரிவார தெய்வங்களுக்கு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. பூஜை ஏற்பாடுகளைஅர்ச்சகர் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்து இருந்தனர். முற்றோருதல் ஏற்பாடுகளை ஆன்மிக பேரரவையினர் செய்து இருந்தனர்.


