காவ்யா பதிப்பகம் விலை 1000/- பக்கம் 1014
நூல் வேண்டுவோர் 9840480232 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்.
நான் தாமிரபரணியை பற்றி நான் எழுதி 2009 ல் வெளிவந்த தலைத் தாமிரபரணி நூல் மூன்றாவது பதிப்பாக புது பொலிவுடன் வெளிவந்துள்ளது. தாமிரபரணி நதி வரலாற்றில் முதல் முதலாக 1000 பக்கம் கொண்ட அற்புதமான நூல் இது சுமார் 13 வருடம் கழித்து மீண்டும் காவ்யா பதிப்பகமே இந்த நூலை மறுபதிப்பு செய்துள்ளது. இது மேலும் நமக்கு ஆனந்தம் தர கூடியதாக இருக்கிறது.
பொதிகை மலை முதல் மேலச்செவல் வரை இந்து கிறிஸ்தவ முஸ்லீம் ஆலய வரலாறு. இந்தப்பகுதியில் வாழ்ந்த மகான்கள் விடுதலைப்பேராட்ட வீரர்கள் வரலாறு , நடந்த சம்பவங்கள் மற்றும் செவிவழிக் கதைகள் நவகயிலாயம், நடராஜரின் பஞ்சதலங்கள் பற்றி எழுதப்பட்ட நூல்.
இந்த நூலில் காவ்யா சண்முக சுந்தரம் அய்யா வாழ்த்துரையை மிகச்சிறப்பாக எழுதியுள்ளார்.
தாமிரபரணி பொதிகையில் பிறந்து பொருநையாய் தவழ்ந்து புன்ன காயலில் புகுந்த நதிதேவி இந்த ரதி தேவியின் அழகு, அருள், ஆற்றல், ஆக்கம் சொல்லில் அடங்காதவை. இது ஓரு இரட்டை நதி பாண்டிய மண்ணில் கிழக்கு நோக்கியும் சேரமண்ணில் மேற்கு நோக்கியும் பாய்ந்து வளம் கொழித்து வருகிறது.
திக்கெல்லாம் புகழப்படும் திருநெல்வேலிக்குப் புகழ் தருவதில் பொதிகை, தென்றல், அல்வா, அகத்தியர், முத்து, குற்றாலம், திருச்செந்தூர், கிருஷ்ணாபுரம் . ஆகியவற்றில் பொருநையும் ஒன்று. திருநெல்வேலியின் வரலாற்றையும், மண்ணின் மாண்பையும் மக்களின் மகிமையும் கால்டுவெல் தொடங்கி குருகுஹதாசப் பிள்ளை, பேட், ஆவணக் காப்பகம், சோமலே, மணிமேகலை பிரசுரம் எனப் பலர் எழுதியுள்ளார்கள்.
இது முத்தாலங்குறிச்சி காமராசுவின் முத்து முத்தான முயற்சி.
தண்ணீருக்கள் முத்துக்குளிப்பது சிரமம் தான் என்றாலும் இவர் தரையில் மூழ்கி நூலெடுத்துள்ளார்.
இது ஒரு தனி மனித சாதனை.
பேருந்து நடத்துநர், போட்டோ கிராபர், பத்திரிக்கை நிருபர், படைப்பிலக்கிய வாதி என்பவற்றோடு இவர் நெல்லையின் நேசர், தாமிர பரணியின் தாசர், பொதிகையில் பூசாரி, திருநெல்வேலியின் மீதுள்ள தீராக் காதலே இவரது அக்கறையும் ஆர்வமும், உழைப்பும் உற்சாகமும் என்னை ஆச்சரியப்படுத்தும். இவரது பண்பும், பணியும் பணிவும் என்னைப் பிரமிக்கச் செய்கிறது.
இவருக்கு இன்றும் பல கனவுகள் உள்ளன. எல்லாவற்றையும எங்கள் சுடலை மாடனும், இசக்கியம்மையும் திருச்செந்தூர் முருகனும் தான் நனவாக்கித் தரவேண்டும் என்று எழுதியிருந்தார்.
அதற்கான வேலைகள்தான் நடந்துக் கொண்டிருக்கிறது. முதல் நூலில் பொதிகை மலை முதல் மேலச்செவல் வரை எழுதியிருந் தோம். தற்போது இடைத் தாமிரபரணியில் கோபால சமுத்திரத்தில் துவங்கி தருவை வரை வந்துள்ளோம். இந்த இடைத் தாமிரபரணி நூலை முடிக்க நெல்லை மாவட்டம் சிவலப்பேரி வரை செல்லவேண்டும்
அதுவும் இந்த வருடத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும். அதற்கான வேலை மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. கொரோனா தொற்றுக் காலம் இரண்டு வருடத்தினை முழுவதுமாக முடங்கி விட்டது. எனவே தொடர்ந்து நாம் பயணிக்க வேண்டும்.
அனைவரும் உதவுங்கள் ஆதரவு தாருங்கள் – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு