நாரைக்கிணறு அருகே உள்ள ரயில்வே கேட் நாளை (டிச.20) முதல் 2 நாட்களுக்கு மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு அருகே கைலாசபுரம் – வேப்பன்குளம் இடையே ரயில்வே தண்டவாளம் மேம்படுத்தும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை (டிச.20) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 21-ந்தேதி மாலை 6 மணி வரை அங்குள்ள ரயில்வே கேட் மூடப்படும் என்று நெல்லை ரயில்வே பொறியியல் பிரிவு தெரிவித்து உள்ளது.


