திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வலியறுத்தி வணிகர் சங்கம் மற்றும் ரயில்வே வளர்ச்சிக்குழு சார்பில் திருச்செந்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும். ஒருநாளைக்கு 14 முறை மூடிதிறக்கும் ஆறுமுகநேரி ரயில்வே கேட்டை போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆறுமுகநேரி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்திட வேண்டும்.
கூடுதல் ரயில் பெட்டிகள் நிற்பதற்கு வசதியாக திருச்செந்தூர் ரயில் நிலையத்தை விரிவாக்கம் போர்க்கால அடிப்படையில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செந்தூர் பகத்சிங் பேரூநது நிலையத்தின் முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கம், ஆறுமுகநேரி ரயில்வே வளர்ச்சிக்குழுவும் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து காெண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்


