தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொருநை காவலர்நூற்றுவர்’ பொறுப்பேற்பு விழா பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நடை பெற்றது.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் ஜேசுராஜ் வர வேற்றார். பொதுச்செய லாளர் எழுத்தாளர் அய்கோ. இயக்கத்தின் நோக்கம் பற்றி பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அவர் பேசியதாவது:-
இன்றைய தினம் முக்கிய மான பணியில் உங்களை ஈடு படுத்திக்கொண்டிருக்கி றீர்கள். அதை செவ்வனே செய்ய வேண்டும். நான் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதில் இருந்து நெல்லை தொகுதிக்கு முக்கியமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறேன். குறிப்பாக, குலவணி கர்புரத்தில் ‘ஒய்’ வடிவ
ரெயில்வே மேம்பாலம் அமைக்க ஏற்பாடாகி வருகிறது. அதேபோல், நெல்லையை தலைமை இடமாகக் கொண்டு நெல்லை ரெயில்வே கோட்டம் அமைப்பதற்கான வேலை நடந்து வருகிறது. பாராளுமன்றத்தில் எனது முதல் பேச்சிலேயே இந்த கோரிக்கைகளை முன்வைத்தேன்.
மேலும், பாபநாசம் மேலணையில் இருந்து தாமிரபரணியை பார்வை யிட்டு வந்தேன். அப்போது நமது மாவட்டத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஏன் இவ்வாறு பாழ்பட்டிருக்கிறது? என்ற வருத்தம் என்னுள் ஏற்பட்டது. இதனால் அதை சீரமைக்கும் பணியில் என்னை ஈடு படுத்திக்கொள்ள தீர்மா னித்தேன்.
இதுகுறித்து மத்திய ஜல்சக்தி மந்திரியிடம் மனு கொடுத்துள்ளேன். மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் ஆய்வுக்கு வந்தபோது தான் ஜார்கண்ட தேர்தல் பணியில் இருந்தேன். இருந்தாலும் முன்னிலையில் தெரிவிக்கும் அவர்கள் கருத்து ஆவலில் இரவோடு இரவாக விமானத்தை பிடித்து வந்து சேர்ந்தேன்.
இன்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மராட்டிய மாநிலத் தேர்தல் களத்தில் இருந்து வந்துள்ளேன். ஆர்வமாக தாமிர பரணியை பாதுகாக்க வேண்டியது நமது கடமை யாக இருக்கிறது. அதற்காக எந்த வேலையையும் செய்ய நான் தயாராக உள்ளேன்.
ஆற்றை ஆக்கிரமிப்பில் இருந்து, சீரமைக்க ஆய்வு திட்டம் ஒன்றை வகுக்க வேண்டும். அதை மத்திய அரசிடம் கொண்டுசென்று நதியை சீரமைக்க திட்டம் வகுத்து நிதி ஒதுக்க உறுதியாக பாடுபடுவேன். தாமிரபரணி தூய்மை மீட்பு பணியில் அனைத்து அமைப்புகளும் தனி மனிதர்களும் இணைந்து செயலாற்றவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் மேலப்பாளை யம் டாக்டர் பிரேமச்சந்திரன் வாழ்த்துப்பாடல் பாடினார். இயக்க கலை, இலக்கிய குழு செயலாளர் ஜேசுராஜன் ஜோதி நேசன் விழிப்புணர்வு பாடல்கள் பாடினார். எழுத்தாளர் முத்தா லங்குறிச்சி காமராசு வாழ்த்தி பேசினார். இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கண்மணி மாவீரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசபெல்லா நன்றி கூறினார்.


