தூத்துக்குடி மறைமாவட்டம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பண்டாரம்பட்டியில் உள்ள ரீத்தம்மாள்புரம் பகுதியில் ஏழை எளிய குடும்பத்திற்கு ரூபாய் 7இலட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வீட்டை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டனி வழங்கினார்.
தூத்துக்குடி மறைமாவட்டம் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்களை மறை மாவட்டம் சார்பில் எழை எளியோர் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 15 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான திருத்தூதர் தோமையார் இல்லம் என்ற பெயரில் வீடு கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
இதில் முதற்கட்டமாக தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டியில் உள்ள ரீத்தம்மாள் பகுதியை சேர்ந்த ஏழை எளிய பெண் வசந்தா என்றவருக்கு மறை மாவட்டம் சார்பில் ரூபாய் 7இலட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட வீட்டை மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறை மாவட்ட ஆயர் குத்துவிளக்கு ஏற்றி வீட்டை அர்ச்சிப்பு செய்து பயனாளியிடம் வீட்டை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் வீடு கட்டும் குழு பங்குத்தந்தை கிராசியஸ் மைக்கேல், பண்டாரம் பட்டி பங்கு தந்தை அத்தனாசியஸ் ஜோ மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


