தூத்துக்குடியில் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கங்கா பரமேஸ்வரி காலனி, செல்வநாயகபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் என பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய மேல்நிலை குடிநீர் தொட்டிகளின் பணிகளையும் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


