கவுண்டன்பட்டியில் ரூ.14.31லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை மார்கண்டேயன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஊராட்சி ஒன்றியம், கவுண்டன்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14.31-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் பேரூர் கழகச் செயலாளர் மருதபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சமுத்திரக்கனி, ஒன்றிய பொறியாளர் தமிழ்ச்செல்வன் மாவட்ட பிரதிநிதி வி.சி காளிமுத்து கிளைச் செயலாளர் முருகன் புதூர் கிழக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் சூர்யா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கொண்டனர்.


