தூத்துக்குடியில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை பகுதியில் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை வௌ்ள காலத்திற்கு பின்பு நடைபெற்று வரும் பணிகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் 5வது வார்டுக்குட்பட்ட அய்யர்விளை வடக்கு பகுதியில் தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் மற்றும் மின் மோட்டார் அறை அமைப்பதற்கான பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.உடன் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கவுன்சிலர்கள் அந்தோணி பிரகாஷ் மார்சலின், ஜெயசீலி, வட்டப் பிரதிநிதி பாஸ்கர். வட்ட துணைச் செயலாளர் ராஜேந்திரன், மற்றும் மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.


