தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.,க்கு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்ற கனிமொழி எம்பிக்கு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் பாபு வழிகாட்டுதலின் பேரில் அதன் துணைத் தலைவர் எம். மெய்கண்டன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது,”காது கேளாதவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு தொடர்ந்து செய்யும் அதற்கு நான் துணையாக இருப்பேன் என்று கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூட்டமைப்பு பொதுச்செயலாளர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


