திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் உடன்குடி அனல் மின் நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஒரு அலகு 660 மெகாவாட் என மொத்தம் இரு அலகுகள் மூலம் 1320 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதில் முதல்கட்டமாக முதல் அலகு பணிகள் நிறைவடைந்து கடந்த வாரம் முதல் அவ்வப்போது சோதனை ஓட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அனல்மின் நிலையத்தில் முதல் யூனிட் பணிகள் முழுமையாக நிறைவடைந்து ஓரிரு வாரத்தில் மின் உற்பத்தி துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையத்தை ஆய்வு செய்வதற்காக மத்திய அரசின் ஆர்ஏசி நிறுவனத்தில் அலுவல் சாரா இயக்குநர் நாராயண திருப்பதி ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார்.
அவர் பணிகள் நடைபெறும் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து உடன்குடியில் கடலுக்குள் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள நிலக்கரி இறக்குமதி செய்யும் துறைமுகம் பகுதிக்கும் சென்று பார்வையிட்டார்.
அடுத்த 5 அல்லது 6 மாத காலத்திற்குள் முதல் அலகில் இருந்து மின் உற்பத்தி தொடங்கும் என்றும் இதனால் தமிழகத்தின் மின் தேவை பூர்த்தி அடையும் எனவும் அவர் தெரிவித்தார்.


