சாத்தான்குளத்தில் கிணற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 5பேரின் உடலுக்கு கனிமொழி எம்பி அஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். வாகனத்தில் மொத்தம் இருந்த 8 பேரில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 4 மணி நேர மீட்புப் பணிக்குப் பின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்து உயிரிழந்த 5 பேரின் உடலுக்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவர்களது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.


