நாலுமாவடி தெருக்களில் குப்பைகள் தேங்குவதால் தொற்று நோய் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி சிற்றூராட்சியாக செயல்பட்டு வருகி றது.நாலுமாவடி ஊராட்சி தற்போது ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தலைவர் துணைத் தலைவர் ஆகி யோரால் நிர்வகிக்கப் பட்டு வருகிறது. இவ்வூராட்சி தெருக்கள் தோறும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் இதன் மூலம் பொதுமக்களுக்கு தொற் று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலை யிட்டு தெருக்களில் குப் பைகள் தேங்கிக்கிடப் பதை அப்புறப்படுத்தி தொற்றுநோய் பரவாத வண்ணம் அதற்குரிய தடுப்புவழிகளை உபயோ கிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரி க்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


