ஊர்வசி D.செல்வராஜ் அகடமி, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள படித்த இளைஞர்களுக்கு மத்திய/மாநில அரசு வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் நமது சட்டமன்ற உறுப்பினர் திரு.ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்கள் ஊர்வசி D. செல்வராஜ் அகடமியை எண்: 56. சன்னதி தெரு, ஸ்ரீவைகுண்டம் நகரில் ஆரம்பித்துள்ளர்கள். அகடமி பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 6ம் தேதி புதன்கிழமை தொடங்க இருக்கின்றது. பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள் உடனே கீழ்கண்ட மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ள படுகிறார்கள். நேரில் வந்து சேர்ந்து கொள்ளலாம். மின்னஞ்சல்: oorvasiacademy@gmail.com


