தூத்துக்குடியில் பெட்ரோல் பங்க்குகளில் எத்தனால் கூடுதலாக கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ். முத்து கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் “பெட்ரோலில் எத்தனால் அளவு 20% சேர்த்து எத்தனால் கல்பபதால் வாகங்களில் இன்சின் ஆயுள் காலம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இஞ்சின் உட்பகுதி வேகமாக தேய்ந்து கார்பன் படியும் நிலை ஏற்படுகிறது. தற்போதுநிலமை மேலும் மோசமாகியுள்ளது. வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கு போதே இன் சின் நின்று (OFF) விடுகிறது.
பெட்ரோலில் பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் செய்யப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் பயன்படுத்தும் சாதாரண மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் பெட்ரோல் பங்க்குகளில் பொதுமக்கள் தகராறு செய்யும் நிலமை ஏற்பட்டுள்ளது. எனவே கூடுதலாக எத்தனால் கலப்பது குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


