தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், ரயில்வே போலீசார் ‘வாட்ஸ்அப்’ குழு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயிலில் பயணம் செய்யும் பெண் பயணிகளுக்கு இருப்புப்பாதை காவல்துறை ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனடியாக வாட்ஸாப் குழுவில் தெரிவிக்குமாறும், தமிழ்நாடு ரயில்வே காவல் துறை உதவி எண்.1512 க்கு தகவல் தர கூறியும் இருப்புப்பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் மற்றும் சைல்டு ஹெல்ப் லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் அன்பரசு முன்னிலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


